அரசியல் கட்சியினர் வழங்கும் டோக்கன்களுக்கு பணம் கொடுத்தால் நடவடிக்கை: அடகு கடை உரிமையாளர்களுக்கு தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

 

திருவாரூர், மார்ச் 18: திருவாரூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் வழங்கும் டோக்கன்களுக்கு பணம் கொடுத்தால் நடவடிக்கை என நகைஅடகு கடை உரிமையாளர்களுக்கு தேர்தல் அலுவலர் மோகனசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அடகு கடை, திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் தங்குவோர் விபரங்கள் சரியான பெயர், முகவரி, அலைபேசி எண்ணுடன் தவறாமல் பதிவேட்டில் பதியப்பட்டிருக்க வேண்டும்.

Related Stories: