இதில்,”அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பிரச்னைக்கு தீர்வு என்பது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு கொடுக்கப்படும் கடும் தண்டனை விதிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை அரங்கேற்ற நினைக்கும் ஒன்றிய பாஜ அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
நீட்டிக்கப்பட்டுள்ள ஜெபிசி இந்த மசோதாவை கைவிட பரிந்துரைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமித்ஷாவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய ஜனநாயக போராட்டங்களை முடக்கும் விதமாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களின் மீது பொய் வழக்கு தொடுத்திருப்பது பாசிச ஆட்சியின் உச்சம். இது போன்ற ஒன்றிய அரசின் எதேச்சதிகார மனநிலையை வன்மையாக கண்டிக்கிறோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என மாவட்ட செயலாளர் அன்சாரி கூறினார்.
The post இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்: தவ்ஹீத் ஜமாத் மாநாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.