திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏர்ஏசியா விமானம் நேற்றுமுன்தினம் வந்தது. இதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஒரு ஆண் பயணி, கொண்டு வந்த உடைமையை சோதனை செய்தபோது காஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரெகுலேட்டரை பிரித்து பார்த்தபோது அதில் 194 கிராம் எடையுள்ள 3 தங்க துண்டுகள் இருந்தது. இதன் மதிப்பு ₹15.12 லட்சம்.
The post காஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் மறைத்து கடத்திய தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.