திருச்சி: மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு திருச்சி வந்த விமான பயணிகளிடம் ஏர்போர்ட் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 3 பயணிகள் உடமைகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருந்தனர். இதேபோல் சிங்கப்பூரிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு திருச்சி வந்த 6 பயணிகள், உடமைகளில் தங்கம் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 9 பயணிகளிடமிருந்தும் ரூ.3 கோடி மதிப்புள்ள 3 கிலோ 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 9 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
