கேரளாவில் 10 நாளில் ரூ.713 கோடிக்கு மது விற்பனை

திருவனந்தபுரம்: கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேரளாவில் 10 நாட்களில் ரூ.713 கோடிக்கு மது வகைகள் விற்பனை ஆகியுள்ளன. புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் ரூ.108 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகள் கேரள மதுபான விற்பனைக் கழகத்தின் சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரளா முழுவதும் 350க்கும் மேற்பட்ட சில்லறை மதுக்கடைகள் உள்ளன.

கேரளாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ஓணம், சித்திரை விஷு போன்ற பண்டிகை நாட்களில் தான் மது விற்பனை அதிகமாக இருக்கும். இந்த வருடமும் வழக்கம்போல் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு மது விற்பனை அதிக அளவில் நடந்துள்ளது. கடந்த டிசம்பர் 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை மொத்தம் ரூ.713 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளன. கடந்த வருடம் இதே 10 நாட்களில் ரூ.697.05 கோடிக்கு மது விற்பனை நடந்தது. புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிசம்பர் 31ம் தேதி ரூ.108 கோடிக்கு மது வகைகள் விற்பனையானது. கடந்த வருடம் இந்த நாளில் ரூ.94.77 கோடிக்கு மது விற்பனை நடந்தது.

The post கேரளாவில் 10 நாளில் ரூ.713 கோடிக்கு மது விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: