ஜிம்பாப்வே – ஆப்கன் முதல் டெஸ்டில் 6 சதங்கள் அணி வகுப்பு: மழையும் ஆடியதால் போட்டி டிரா

புலவாயோ: ஜிம்பாப்வே சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. புலவயோவில் நடந்த முதல் டெஸ்ட்டில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 586 ரன் குவித்தது. அந்த அணியின் சீன் வில்லியம்ஸ் 154, பிரைன் பென்னட் ஆட்டமிழக்காமல் 110, கேப்டன் கிரெய்க் எர்வின் 104 விளாசினர்.

அதையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய ஆப்கன் அணியின் கேப்டன் அசமத்துல்லா 246, ரகமத் ஷா 234 ரன் என ஆளுக்கொரு இரட்டைச் சதம் விளாசினர். அஸ்ஃபர் சஜாய் 113 எடுத்தார். அதனால் ஆப்கன் முதல் முறையாக, தனது டெஸ்ட் வரலாற்றில் 699 ரன் குவித்து ஜிம்பாப்வேயை முந்தியது.

கடைசி நாளான நேற்று முன்தினம் 2வது இன்னிங்சை ஜிம்பாப்வே ஆடியபோது நீண்ட நேரம் மழையால் தடைபட்டது. மழை விட்டபோது ஆட்டத்தை தொடர்ந்த ஜிம்பாப்வே 4விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்தபோது டிராவுடன் முடிவுக்கு வந்தது. ஆட்ட நாயகனாக ஆப்கன் வீரர் அசமத்துல்லா தேர்வு செய்யப்பட்டார். இந்த அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 2வது டெஸ்ட் நாளை புலவயோவில் தொடங்குகிறது.

The post ஜிம்பாப்வே – ஆப்கன் முதல் டெஸ்டில் 6 சதங்கள் அணி வகுப்பு: மழையும் ஆடியதால் போட்டி டிரா appeared first on Dinakaran.

Related Stories: