பகுத்தறிவு இல்லாமல் ஐ.பி.எஸ் படித்தாலும் பிரயோஜினம் இல்லை; சாட்டையால் அடித்துக் கொள்பவர்களையும் சேர்ந்து திருத்த வேண்டிய கடமை உள்ளது: கி.வீரமணி

திருச்சி: பகுத்தறிவு இல்லாமல் ஐ.பி.எஸ் படித்தாலும் பிரயோஜினம் இல்லை என்றும் சாட்டையால் அடித்துக் கொள்பவர்களையும் சேர்ந்து திருத்த வேண்டிய கடமை இருப்பதாகவும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆவது மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

மாநாட்டின் நிறைவு பகுதியாக திருச்சி புத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசா நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் உரையாற்றிய கி. வீரமணி ஐ.பி.எஸ் படித்தும் பகுத்தறிவு இல்லாததால் தான் சாட்டையை தூக்கி கொண்டு வருவதாக அண்ணாமலையை விமர்சித்தார். மணிப்பூர் சம்பவத்திற்கு யாரை சாட்டையால் அடிப்பது என ஆர்.ராசா கேள்வி எழுப்பினார்.

பின்னர் பேசிய நடிகர் சத்யராஜ் பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்கள் ஒன்றிணைந்து இந்தியாவை பெரியார் மாயமாக்கி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பொதுக்கூட்டத்தில் முன்னதாக கி.வீரமணி தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வீரமணி, பூஜா தம்பதியினர் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர். கூட்டத்தில் பகுத்தறிவாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள், திராவிட கழகத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

The post பகுத்தறிவு இல்லாமல் ஐ.பி.எஸ் படித்தாலும் பிரயோஜினம் இல்லை; சாட்டையால் அடித்துக் கொள்பவர்களையும் சேர்ந்து திருத்த வேண்டிய கடமை உள்ளது: கி.வீரமணி appeared first on Dinakaran.

Related Stories: