அசோக் செல்வன், ரிது வர்மா நடித்துள்ள மாடர்ன் லவ் சென்னை வெப்சீரிஸ்; மே 18ல் ரிலீஸ்

சென்னை: 2019ம் ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஆங்கில வெப் தொடர் ‘மாடர்ன் லவ்’. ஆந்தாலஜி வகையைச் சேர்ந்த இத்தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் – மும்பை’ கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இத்தொடரின் தமிழ் அத்தியாயத்தின் வெளியீட்டுத் தேதியை ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடர் வரும் மே 18ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. மாடர்ன் லவ் – சென்னை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்தொடரில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்‌ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு இயக்குநர்கள் ஆறு எபிசோடுகளை இயக்கியுள்ளனர். இந்தத் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பாடல்கள் இளையராஜா, யுகபாரதி மற்றும் பாக்கியம் சங்கரால் எழுதப்பட்டுள்ளன. இதில் அசோக் செல்வன், ரிது வர்மா, ரம்யா நம்பீசன், வாமிகா, கிஷோர், டெல்லி கணேஷ், சஞ்சுலா சாரதி, சூகோய் ஷெங், டிஜே.பானு, கௌரி பிரியா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

The post அசோக் செல்வன், ரிது வர்மா நடித்துள்ள மாடர்ன் லவ் சென்னை வெப்சீரிஸ்; மே 18ல் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: