திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், பத்ராத்ரி கொத்தகுடேம், மனுகுரு, கோதாவரி கனி, பூபாலபள்ளி, சர்லா, சிந்தகனி, பத்ராசலம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா, ஜக்கையாபேட்டை, திருவூரு, கம்பாலகுடேம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 7.27 மணியளவில் சில நொடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதியுடன் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.
The post ஆந்திரா, தெலங்கானாவில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் பீதி appeared first on Dinakaran.