மார்ச் 3ல் சந்திரகிரகணத்தையொட்டி ஏழுமலையான் கோயில் 10 மணிநேரம் மூடப்படும்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

 

திருமலை: திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3ம் தேதி நிகழ்கிறது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் 10 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட உள்ளது.

சந்திர கிரகணம் மார்ச் 3ம் தேதி பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் நீடிக்கும். கிரகணத்தன்று காலை 9 மணி முதல் மாலை 7:30 மணி வரை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

 

Related Stories: