டெல்லி: தீ அபாயம் உள்ளதால் விமானங்களில் பவர்பேங்க் பயன்படுத்தி மற்ற சாதனங்களுக்கு சார்ஜ் செய்யவும் அல்லது பவர்பேங்க்கை சார்ஜ் செய்யவும் DGCA ஆணையம் தடை விதித்தது. மேலும் பவர்பேங் மற்றும் பேட்டரிகளை கைப்பையில் மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி எனவும் விமானத்தின் உள்ளே மேலிருக்கும் உடமைகளுக்கான இடத்தில் கூட வைக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
