இப்பதவிக்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு வருகிற 6ம் தேதி சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தற்காலிக விண்ணப்பதார்களின் பட்டியல் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு நாள் நேரம் மற்றும் விவரம் அடங்கிய அழைப்புக்கடிதத்தை விண்ணப்பதாரர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு அதற்கான விவரம் எஸ்எம்ஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இத்தகவலை டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
The post ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் உதவிப் பொறியாளர் பணிக்கு 6ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.