9 நாள் இழுபறி முடிவுக்கு வருமா? மகாராஷ்டிரா முதல்வர் இன்று தேர்வு: ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் யார் என்பது இன்று முடிவு செய்யப்படும் என, ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜ, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

பாஜ அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் முதல்வர் பதவி தனக்குதான் என்று தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முரண்டு பிடித்ததால் தேர்தல் முடிவு வெளியாகி 9 நாட்கள் ஆகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. பின்னர், பிரதமரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முதல்வர் தொடர்பாக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று ஷிண்டே அறிவித்தார்.

ஆனால், மும்பையில் முதல்வர் யார் என முடிவு செய்வதற்கான மகாயுதி கூட்டணி கூட்டத்தை புறக்கணித்து விட்டு சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு சென்ற முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சொந்த ஊரில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் யார் என்பது இன்று முடிவு செய்யப்படும் என்றார். இதைத் தொடர்ந்து பாஜ மூத்த தலைவர் ஒருவர் நேற்றிரவு அளித்த பேட்டியில், மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு தேவேந்திர பட்நவிஸ் பெயர் முடிவு செய்யப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

The post 9 நாள் இழுபறி முடிவுக்கு வருமா? மகாராஷ்டிரா முதல்வர் இன்று தேர்வு: ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: