அலைபாயுதே பட பாணியில் திருமணம் முடித்த பிளஸ் 1 மாணவர்கள்

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவனும், 16 வயது மாணவியும் பிளஸ் 1 படித்து வருகின்றனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களிடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஒரே பள்ளியில் படித்து வந்ததால் தினமும் காதலை வளர்த்து வந்தனர். கடந்த மே மாதம் காதல் ஜோடியினர் பெற்றோருக்கு தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட மாணவி மீது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்துள்ளனர்.

அப்போது பிளஸ் 1 மாணவனை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நாககுமாரி விசாரணை நடத்தி மாணவன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மாணவியை மீட்டு தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். அலைபாயுதே திரைப்பட பாணியில் மாணவனும், மாணவியும் திருமணம் முடித்துக் கொண்ட சம்பவம், சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அலைபாயுதே பட பாணியில் திருமணம் முடித்த பிளஸ் 1 மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: