சீனா மாஸ்டர்ஸ் பெண்கள் பேட்மின்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள், சீனாவின் சென்சான் நகரில் நேற்று நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை ஓங்க்பாம்ருங்மன் புசானனை, 21-17, 21-19 என நேர் செட்களில் போராடி வென்றார். இந்த வெற்றியின் மூலம் சிந்து காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மாளவிகா மன்சூட், டென்மார்க் வீராங்கனை லின் ஹோஜ்மார்க்கை, 20-22, 23-21, 26-24 என்ற செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்ஷயா சென், மலேசியாவின் ஜி ஜியா லீ யை, 21-14, 13-21, 21-13 என்ற கணக்கில் வென்றார்.
எம்ஓபி வைணவ கல்லுாரி ஒட்டு மொத்த சாம்பியன்
கல்லூரிகளுக்கு இடையிலான அமிட்டி பிரிமீயர் லீக் தடகளப் போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்தப் போட்டியில் சென்னை எம்ஓபி வைணவ பெண்கள் கல்லூரி 11 தங்கம், 5வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 18 பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
The post மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: சிந்து, சென் வெற்றி appeared first on Dinakaran.