கட்சி பணியில் ஈடுபடாவிட்டால் பத்து நாளில் நிர்வாகிகள் மாற்றம்: எஸ்.பி.வேலுமணி திடீர் சவுண்டு

சூலூர்: சரியாக வேலை செய்யாதவர்களை மாற்றி விட்டு பத்து நாளுக்குள் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென சவுண்டு விட்டுள்ளார். கோவை மாவட்டம் சூலூர் அருகே முத்து கவுண்டன் புதூர் தனியார் திருமண மண்டபத்தில் கோவை மாநகர் மற்றும் புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் மட்டுமின்றி, சாதாரணமான அனைத்து நாட்களிலும் அரசியல் களத்திலும் நவீன தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகளை முன்னோட்டமாக கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதிமுகவின் செயல்பாடுகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் யார் கருத்து பதிவிட்டாலும் தொழில்நுட்ப அணியினர் உடனடியாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் குறிப்பிட்ட சிலர் கட்சி பணிகளில் சரிவர ஈடுபடுவதில்லை என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, இன்னும் பத்து நாட்களுக்குள் பழைய நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இந்த பேச்சு அதிமுக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

The post கட்சி பணியில் ஈடுபடாவிட்டால் பத்து நாளில் நிர்வாகிகள் மாற்றம்: எஸ்.பி.வேலுமணி திடீர் சவுண்டு appeared first on Dinakaran.

Related Stories: