தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்பஷீர். இவரது மகன் அஜ்மல்(12). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அஸ்லாம் மகன் ஹர்மான்(12). இவர் அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் அங்குள்ள மாந்தோப்பிற்கு விளையாட சென்றனர். அங்குள்ள விவசாய பம்பு செட்டில் கட்டப்பட்டுள்ள ஆழமான தண்ணீர் தொட்டியில் இருவரும் இறங்கி குளித்துள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: