பொங்கல் பண்டிகை கொண்டாட துணை ஜனாதிபதி நாளை திருப்பூர் வருகை

திருப்பூர்: இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பொங்கல் பண்டிகை கொண்டாட அவரது சொந்த ஊரான திருப்பூருக்கு நாளை வருகை தருகிறார். அதன்படி நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினம் ( வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் பிச்சம்பாளையம் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளார்.

மேலும் குலதெய்வ கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்றும் அவா் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவா் வந்து செல்லும் வழிகளில் மற்றும் அவா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

 

Related Stories: