வெப்தொடரில் அதர்வா, நிகிலா

சென்னை: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக அதர்வா முரளி, மணிகண்டன், நிகிலா விமல், கவுதம் வாசுதேவ் மேனன், தில்னாஸ் இரானி, இளவரசு, திவ்யதர்ஷினி, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷிகாந்த், முரளி அப்பாஸ் நடித்துள்ள வெப்தொடர், ‘மத்தகம்’. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இதை பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியைக் குறிக்கும். யானை தனது தும்பிக்கையுடன் இணைந்த மத்தகத்தை தன்னை காத்துக்கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும். இதுகுறித்து பிரசாத் முருகேசன் கூறுகையில், ‘30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் கொண்ட வெப்தொடர், ‘மத்தகம்’. ஒரு இரவில் ஹீரோவுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தைப் படமாக்கியது சவாலானதாக இருந்தது. தர்புகா சிவா இசை அமைக்க, எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார்’ என்றார். இத்தொடர் ஒளிபரப்பாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.

The post வெப்தொடரில் அதர்வா, நிகிலா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: