காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்: கடந்த வாரத்தை விட விலை அதிகரிப்பு

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று அதிகளவில் மீன் பிடித்து வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள். விடுமுறைநாளான ஞாயிற்றுக்கிழமை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கூட்டம் நிரம்பி வழியும். நேற்று ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன் பிடித்து கரை திரும்பினர். இதனால், நேற்று காலை முதல் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் மற்ற மீன்கள் வரத்து குறைவு காரணமாக விலை கடந்த வாரத்தை விட அதிகமாகவே காணப்பட்டது.

அதாவது கடந்த வாரம் கிலோ ₹300க்கு விற்கப்பட்ட சங்கரா மீன் நேற்று ₹450க்கு விற்கப்பட்டது. வெள்ளை வவ்வால் ₹900 லிருந்து ₹1100 ஆகவும், வவ்வால் ₹550லிருந்து ₹650 ஆகவும், சீலா ₹400லிருந்து ₹450, இறால் ₹350லிருந்து ₹500 ஆகவும், கடம்பா ₹300லிருந்து ₹500 ஆகவும் விலை உயர்ந்து காணப்பட்டது. அதேசமயம் கொடுவா ₹550லிருந்து ₹500 ஆக குறைத்து விற்கப்பட்டது. மேலும் சில மீன்கள் விலையும் குறைந்து காணப்பட்டது. வஞ்சிரம் கிலோ ₹1000க்கு விற்கப்பட்டது. மீன் விலை சற்று அதிகரித்த போதிலும், அதை ெபாருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர்.

The post காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்: கடந்த வாரத்தை விட விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: