சென்னை: சட்டசபை தேர்தல் திமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு நாளைமுதல் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்துகிறார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு – புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் செலுத்தியவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை, மாவட்ட வாரியாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம்- வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்கள்.
குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டட செயலாளர் மட்டும் வர வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள் வரவேண்டிய அவசியமில்லை. வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையும்- ‘அவர்களுக்காக விருப்ப மனு’ செலுத்தியோரையும் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வரும் 17ம் தேதி காலை 9 மணி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டம், 18ம் தேதி காலை 9 மணி தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, திருநெல்வேலி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டம். மாலை 4 மணி மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும்.
மார்ச் 19ம் தேதி காலை 9 மணி கரூர், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய, கோவை வடக்கு, கோவை மாநகர், கோவை தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் மத்திய, நீலகிரி மாவட்டம். மாலை 4 மணி கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டம். மார்ச் 20 காலை 9 மணி இராணிப்பேட்டை, வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு, திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டம். மாலை 4 மணி தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்திலும் நேர்காணல் நடைபெறும்.
மார்ச் 21ம் தேதி காலை 9 மணி திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, பெரம்பலூர், அரியலூர் , மாலை 4 மணி புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர். மார்ச் 22ம் தேதி காலை 9 மணி கடலூர் கிழக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, விழுப்புரம் தெற்கு, காஞ்சிபுரம் தெற்கு. மாலை 4 மணி திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, சென்னை வடக்கு சென்னை வடகிழக்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு நேர்காணல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
