ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவரும், ெஜகன்மோகன் தங்கையுமான ஷர்மிளா பேசியதாவது:
பா.ஜவுடன் சந்திரபாபுநாயுடு நேரடி கூட்டணி வைத்தால், அதே கட்சியுடன் கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் மறைமுக கூட்டணி வைத்திருந்தார். சட்டப்பேரவை சென்று மக்கள் பிரச்சனைகளை கேள்வி கேட்கும் இடத்தில் எதிர்கட்சியாக உள்ள ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை செல்லாமல் உள்ளனர்.
சட்டப்பேரவைக்கு செல்ல தைரியம் இல்லாத எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் கடந்த 10 ஆண்டுகளாக பாஜவுக்கு ஆதரவு அளித்து வந்தாலும் அவர்களால் 10 புதிய தொழிற்சாலைகளை கூட மாநிலத்திற்கு கொண்டு வர முடியவில்லை. ஆந்திர மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். இவ்வாறு கூறினார்.
The post பேரவைக்கு செல்ல முடியாவிட்டால் ஜெகனுக்கு எம்எல்ஏ பதவி எதற்கு..? தங்கை ஷர்மிளா பாய்ச்சல் appeared first on Dinakaran.