பயிர் கழிவு எரிப்பு அபராதம் ரூ30,000 ஆக உயர்வு

புதுடெல்லி: பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக்கு பின் விளைநிலங்களில் உள்ள பயிர்கழிவுகளை எரிப்பதால் தலைநகரில் காற்று மாசு அதிகரிப்பதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழுவின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரித்து மக்கள் சுகாதார பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது. இதனை தொடர்ந்து பயிர்கழிவுகளை எரிப்பவர்களுக்கு அரசு அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் காற்று மாசு பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான நிலைப்பாட்டை தொடர்ந்து பயிர் கழிவுகளை எரிப்பதற்கான அபராதத்தொகையை அரசு இரு மடங்கு உயர்த்தியுள்ளது.

நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்ட விவசாயிகள் பயிர்கழிவுகளை எரித்தால் விதிக்கப்பட்டு வந்த அபராதத்தொகை ரூ2500 தற்போது ரூ5ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு முதல் 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு ரூ5ஆயிரத்துக்கு பதிலாக ரூ10ஆயிரமாக அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கு அபராதம் ரூ30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அதிகபட்ச அபராதம் இது.

The post பயிர் கழிவு எரிப்பு அபராதம் ரூ30,000 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: