தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர் நீக்கப்படாது: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து தேர்தல் குழு கிட்டத்தட்ட 64லட்சம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்,” மேற்கு வங்கத்தில் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான வாக்கெடுப்பை உறுதி செய்வதே எங்கள் நோக்கமாகும். தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்களிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது” என்றார்.

Related Stories: