வேறொரு பெண்ணுடன் இருந்ததை பார்த்ததாக புகார் மனைவியிடம் மன்னிப்பு கேட்டார் கேரள அமைச்சர் கணேஷ்குமார்

திருவனந்தபுரம்: கேரள போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் கணேஷ்குமார். இவர் 100க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். முதல் மனைவி யாமினி தங்கச்சியை கடந்த சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த இவர், பிந்து மேனன் என்பவரை 2 வதாக திருமணம் செய்தார். இந்நிலையில் கணேஷ்குமார் மீது அவரது மனைவி பிந்து மேனன் பரபரப்பு புகார் ெதரிவித்தார். கணேஷ் குமாருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு கணேஷ்குமாரை வீட்டில் வேறொரு பெண்ணுடன் பார்க்கக்கூடாத நிலையில் பார்த்தேன். அதை செல்போனில் வீடியோ எடுத்தேன். இது குறித்து நான் போலீசில் புகார் புகார் செய்தேன். போலீசார் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். அமைச்சர் கணேஷ் குமார் மீது அவரது மனைவி கூறிய புகார், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கணேஷ்குமார் பதவி விலகவேண்டும் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் அமைச்சர் கணேஷ்குமார் தன்னுடைய மனைவி பிந்து மேனனை போனில் அழைத்து மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பிந்து மேனனும் உறுதி செய்துள்ளார். தன்னுடைய கணவர் கணேஷ்குமார் தன்னிடம் மன்னிப்பு கேட்டுள்ளதால் இந்தப் பிரச்னையை இதோடு விட்டுவிடுவதாக அவர் கூறியுள்ளார். முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின்பேரில்தான், கணேஷ்குமார் மனைவியிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

* ராஜினாமா செய்யமாட்டேன்
திருவனந்தபுரத்தில் அவர் கூறியது: நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்காது. என்னுடைய ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு ஒரு கத்தி தந்தால் என்னுடைய கையை வெட்டித் தருகிறேன். இன்னும் ஒரு சில தினங்களில் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். அதன் பிறகு அமைச்சர் பதவிக்கு எந்த மரியாதையும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: