டெல்லி: சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மதிய உணவு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுகளை தயாரிக்க இயலவில்லை என கேண்டீன் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. சான்ட்விச், சாலட்டுகள், பழங்கள் மற்றும் சிற்றுண்டிகள் தொடர்ந்து வழங்கப்படும் என டெல்லி ஐகோர்ட் கேண்டீன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
