குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: போலி நீதிபதி கைது

குஜராத்: குஜராத்தின் காந்திநகரில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, நூற்றுக்கணக்கான நிலத் தகராறு வழக்குகளில் ‘தீர்ப்புகளை’ வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கைது செய்யப்பட்டார். குஜராத்தில் போலி அரசு அலுவலகம், போலி சுங்கச்சாவடியைத் தொடர்ந்து போலி நீதிமன்றம் செயல்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி?

ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

50 ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருப்பதால் தனது பெயருக்கு மாற்றித் தரக் கோரி பாபுஜி கோரியுள்ளார்

மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக்கொண்டு அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார் போலி நீதிபதி சாமுவேல்

இந்த தீர்ப்பை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கிய நிலையில், அதன்மீது ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து போலி நீதிமன்ற தீர்ப்பு நகலை இணைத்து, அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த உரிமையியல் நீதிமன்ற பதிவாளர் போலீசில் புகாரளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் போலி நீதிமன்றம் நடத்திய மோரிஸ் சாமுவேலின் சட்டவிரோத செயல்கள் அம்பலமாகின.

The post குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: போலி நீதிபதி கைது appeared first on Dinakaran.

Related Stories: