கரூர்- கோவை சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

 

கரூர், அக்.18: கரூர் கோவை சாலையில் பெரியாண்டாங்கோயில் பிரிவு பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் இருந்து கோவைக்கு சாலை செல்கிறது. அதிகளவு வாகன போக்குவரத்து காரணமாக இந்த சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்ற அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. இந்த சாலையில், தாராபுரம் பிரிவுச் சாலை வரை கரூர் நகரம் உள்ளது.

இதனால், இருபகுதிகளிலும் பல்வேறு பகுதிகளுக்கு பிரிவுச் சாலை செல்கிறது. அதில் கோவை சாலையில் வடிவேல் நகர் பகுதியை தாண்டியதும் பெரியாண்டாங்கோயில் பகுதிக்கான சாலை பிரிந்து செல்கிறது. இந்த பகுதிகளில் இருந்து பெரியாண்டாங்கோயில், மதுரை பைபாஸ் சாலை, பெரியார் நகர், விசுவநாதபுரி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைவரும் கோவை சாலையில் இருந்து பிரிந்து பெரியாண்டாங்கோயில் பிரிவுச் சாலையில் சென்று வருகின்றன.

அதிகளவில் வாகன போக்குவரத்து காரணமாக வாகனங்கள் இந்த பகுதியில் எளிதாக பிரிந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கரூர்- கோவை சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: