கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பாசி படிந்துள்ள தண்ணீர் தொட்டி

 

கரூர், அக். 10: கரூர் கலெக்டர் அலுவலகம் உட்புற வளாகத்தில் பாசனம் பிடித்த நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் தாந்தோணிமலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தின் உட்புறம் தண்ணீர் தொட்டிக்கான கேட்வால்வு உள்ளது. மூடப்பட்ட நிலையில் உள்ள இந்த தண்ணீர் தொட்டியில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து தண்ணீர் கசிவு காரணமாக பாசனம் பிடித்து மோசமான நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் சுகாதார சீர்கேடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இதனை பார்வையிட்டு தேவையான சீரமைப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எர்பார்க்கப்படுகிறது.

 

The post கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பாசி படிந்துள்ள தண்ணீர் தொட்டி appeared first on Dinakaran.

Related Stories: