கல்லூரி பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 

திருச்சி, அக். 16: திருச்சி சமயபுரத்தில் அமைந்துள்ள K. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பாக நடத்தும் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கான பயிற்றுவித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் வரும் 14 10 24 திங்கள் முதல் 19 10 24 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் துவக்க நாளில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையில் பணிபுரியும் டாக்டர் U.சீனிவாசலு ரெட்டி அசோசியேட் ப்ரொபசர் கலந்துகொண்டு மிஷின் லேர்னிங் டெக்னிக்ஸ் மற்றும் ரியல் டைம் அப்ளிகேஷன் சம்பந்தமான தலைப்புகளில் சிறப்புரையாற்றி வகுப்பினை துவக்கி வைத்துள்ளார்.

மேற்படி பயிற்சி வகுப்புகள் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் வழிகாட்டுதலின் பேரில் அடல் அகாடமியின் பங்களிப்பின் வாயிலாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் திரு . சீனிவாசன் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு S.மணிகண்டன் துணை ஒருங்கிணைப்பாளர் திருமதி R.கமலிதா மற்றும் பல்வேறு கல்லூரியில் இருந்து வந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post கல்லூரி பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: