அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து சேதம்

 

அரவக்குறிச்சி . அக். 16: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி பகுதியில் 150 ஆண்டுக்கு மேல் பழமையான கட்டிடம் மழையின் காரணமாக சேதமடைந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வராதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டி பகுதியில் உள்ள கட்ட முகமது தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடம் .உள்ளது.

பள்ளப்பட்டி பகுதியில் தொடர் மழையின் காரணமாக சேதமடைந்த கட்டிடம் நேற்று திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த வழியாக பொது மக்கள் யாரும் செல்லாதாலும் வீட்டில் யாரும் குடி இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த நகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தினர்.

The post அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: