குளித்தலையில் காந்திய கொள்கை விளக்க பாதயாத்திரை

 

குளித்தலை, அக் 11: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார காங்கிரஸ் சார்பில் காந்திய கொள்கை விளக்க பாதயாத்திரை பேரணி நடைபெற்றது. இந்தபேரணி குளித்தலை சுங்க கேட்டில் இருந்து புறப்பட்டு கடம்பர் கோவில் நீதிமன்றம் வட்டாட்சியர் அலுவலகம், பயணியர் விடுதி, பஸ் நிலையம், பேராளம்மன் கோயில் தெரு, பஜனைமடம், கடைவீதி மாரியம்மன் கோயில் வைசியால் தெரு வழியாக பெரிய பாலம் வரை சென்றடைந்தது. திருச்சி இந்த காந்தியை கொள்கை விளக்க பாதயாத்திரை பேரணிக்கு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காந்தியை கொள்கையை குறித்து விளக்கம் அளித்து பேசினர். இதில் மாநில விவசாய அணி வளையப்பட்டி வெங்கடாசலம், குளித்தலை வட்டார தலைவர் சித.ஆறுமுகம், கரூர் நகரத்தலைவர் ஸ்டீபன் பாபு, மாவட்ட துணைத் தலைவர் பொன்னுச்சாமி, மாநில மகிளா காங்கிரஸ் மணிமேகலை நகரத் தலைவர் சத்தியசீலன், வட்டார பொதுச்செயலாளர் பாலச்சந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜமாணிக்கம், தங்கராஜ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர் காங்கிரஸ்சார் கலந்து கொண்டனர்.

 

The post குளித்தலையில் காந்திய கொள்கை விளக்க பாதயாத்திரை appeared first on Dinakaran.

Related Stories: