கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து வரப்பட்டன சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 211 நச்சு பாம்புகள் மீட்பு: பெருங்களத்தூர் பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

சென்னை: கனமழை காரணமாக நேற்று முன்தினம் மட்டும் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட 211 பாம்புகளை மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டன. பெருங்களத்தூர் பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பை மீட்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. வெள்ள நீரால் குடியிருப்பு பகுதிகளில் நச்சுப்பாம்புகள் அடித்து வரப்பட்டு அதிகளவில் புகுந்தது. இதுகுறித்து வனத்துறை சார்பில் அவசர கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு, தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டது. மேலும், தீயணைப்பு துறை சார்பிலும் பாம்புகள் மற்றும் மீட்பு பணி குறித்து சிறப்பு கட்டுபாட்டு அறைகள் இயங்கியது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் மட்டும் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் புகுந்துள்ளதாக 43 அழைப்புகள் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு நச்சு பாம்புகள் உட்பட 43 பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். பெருங்களத்தூர் பகுதியில் வெள்ள நீரால் அடித்து வரப்பட்ட 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 211 நச்சு பாம்புகளையும் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதேபோல் வெள்ளத்தில் சிக்கிய ஆடு, மாடுகளையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

The post கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து வரப்பட்டன சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 211 நச்சு பாம்புகள் மீட்பு: பெருங்களத்தூர் பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Related Stories: