உலகளாவிய கை கழுவுதல் தினம் கொண்டாட்டம்

 

கும்பகோணம், அக்.16: நோயை தடுப்பதற்கும், உயிரைக் காப்பதற்கும் சோப்புடன் கைகளைக் கழுவுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி உலகளாவிய கை கழுவுதல் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் புறவழிச்சாலையில் இயங்கும் தனியார் பள்ளியில் நேற்று உலகளாவிய கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு மழலையர் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொண்டப்பட்டது. பள்ளி தலைவர் கார்த்திகேயன் கை கழுவுவதின் அவசியத்தை பற்றி எடுத்துரைத்தார். கோவிட்-19, காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியாவை ஏற்படுத்தும் கிருமிகள் உள்ளிட்டவை பரவுவதை தடுப்பதற்கான மிகச்சிறந்த வழிகளில் கை கழுவுதல் ஒன்றாகும் என்பதை வலியுறுத்தி கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி மாணவ மாணவிகள் அழகாக எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post உலகளாவிய கை கழுவுதல் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: