விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

 

விராலிமலை, அக்.16: பிரதோஷ விழாவை முன்னிட்டு விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதி சிவன் கோயில்களில் சிவனுக்கும்,நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விராலிமலை மலை கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் ஒவ்வொரு பிரதோஷம் நாளன்று சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.அதேபோல் நேற்று விராலிமலை முருகன் மலை கோயிலில் உள்ள சிவன் கோயில், விராலிமலை அடுத்துள்ள பழமை வாய்ந்த சிவன் கோயில், வன்னிமரம் சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு பிரதோஷ வழிபாடு நடத்தி சென்றனர். இதே போல் இலுப்பூர்  சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர், அன்னவாசல் விருத்தபுரீஸ்வரர் சமேத தர்மசம்வர்த்தினி,விராலூர் பகுதி சிவன் கோவில்கள் என பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷத்தை ஒட்டி சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நேற்று நடைபெற்றது.

The post விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: