போக்குவரத்திற்கு இடையூறு கார் டிரைவருக்கு அபராதம்

 

தா.பேட்டை, அக்.16: தா.பேட்டை கடைவீதி நால்ரோடு அருகே தனியார் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. கார் உள்ளே யாரும் இல்லாத நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதித்தது. இதுகுறித்து கடைவீதியில் இருந்த பொதுமக்கள் தா.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனே பைக்கில் கடைவீதிக்கு வந்தனர். அங்கு நிறுத்தி இருந்த காரின் பதிவு எண்ணை வைத்து கார் உரிமையாளர் செல்போன் நம்பரை கண்டறிந்து போன் செய்தனர். ஆனால் கார் உரிமையாளர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து போக்குவரத்தை போலீசார் சரி செய்து அனுப்பி வைத்த நிலையில் காரின் ஓட்டுனர் கையில் சாப்பாட்டு பொட்டலங்களுடன் வந்தார். அவருக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். இடையூறு ஏற்படுத்திய வாலிபருக்கு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் மக்களிடம் வரவேற்பை பெற்றது.

The post போக்குவரத்திற்கு இடையூறு கார் டிரைவருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: