துர்கா சிலை ஊர்வலத்தில் இளைஞர் பலி உபியில் பயங்கர வன்முறை கடை, வாகனங்கள் எரிப்பு

பஹ்ரைச்: துர்கா சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இளைஞர் பலியானதால் உபியில் நேற்று பயங்கர வன்முறை ஏற்பட்டது. கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் மன்சூர் கிராமம் மஹ்ராஜ்கஞ்ச் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துர்கா சிலை கரைப்பு ஊர்வலம் நடந்தது. அப்போது ஊர்வலத்தில் சென்றவர்களின் வாகனங்களில் ஒலிபரப்பிய பாடல் தொடர்பாக திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்து ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரேஹுவா மன்சூர் கிராமத்தைச் சேர்ந்த ராம் கோபால் மிஸ்ரா என்பவர் பலியானார்.

இதனால் அந்த பகுதியில் பயங்கர வன்முறை வெடித்தது. பஹ்ரைச் மற்றும் பகர்பூர் நகரத்திலும் வேறு சில இடங்களிலும் வன்முறை வெடித்தன. இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் அதே பகுதியை சேர்ந்த சல்மான் என்பவரை கைது செய்தனர். மேலும் 30 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும் நேற்றும் இந்த வன்முறை நீடித்தது. சாலைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தடிகள், இருப்பு கம்பிகளுடன் ஊர்வலமாக வந்தனர். போலீசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. போலீசார் எச்சரித்தும் பல கடைகள், வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. அங்கு பதற்றம் நிலவுகிறது.

The post துர்கா சிலை ஊர்வலத்தில் இளைஞர் பலி உபியில் பயங்கர வன்முறை கடை, வாகனங்கள் எரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: