120 நாளில் இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் 60 நாளாக குறைகிறது: நவ.1 முதல் அமல்

புதுடெல்லி: விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் படுக்கை, ஏசி வசதி டிக்கெட் முன்பதிவுகளைப் பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ அரசு அமைந்த பிறகு கடந்த 2015 மார்ச் 25 அன்று, 60 நாட்களுக்கு முன்பில் இருந்து முன்பதிவு செய்யும் வசதியை மாற்றி 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்தியது. இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து மீண்டும் 60 நாட்களாக குறைக்கப்படவுள்ளது. இது நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

இதுகுறித்து இந்திய ரயில்வே துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படும். இது நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இருப்பினும், அக்.31ம் தேதி வரை, 120 நாட்களுக்கு முன்பதிவு செய்யும் காலத்தின் கீழ், அனைத்து முன்பதிவுகளும் அப்படியே இருக்கும். இதுபோல, நவ.1 ம் தேதிக்கு முன்பாக, முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை 60 நாட்களுக்குப் பிறகும் ரத்து செய்ய அனுமதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 120 நாளில் இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் 60 நாளாக குறைகிறது: நவ.1 முதல் அமல் appeared first on Dinakaran.

Related Stories: