பண மோசடி வழக்கில் நடிகை தமன்னாவிடம் ஈடி திடீர் விசாரணை

கவுகாத்தி: தமிழில் பிரபல நடிகையான தமன்னா பாட்டியா, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கிய ‘எச்பிஇசட் டோக்கன்’ என்கிற மொபைல் ஆப் குறித்த விசாரணையில் ஆஜராக நடிகை தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. பட ஷூட்டிங் இருப்பதால் முதலில் விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய தமன்னா நேற்று ஆஜராவதாக கூறியிருந்தார். அதன்படி, அசாமின் கவுகாத்தியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் அவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை மைனிங் செய்து வருவாய் ஈட்டலாம் என முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாக எச்பிஇசட் மொபைல் ஆப் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் 76 சீன நிறுவனங்கள் உட்பட 266 நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஆப்பின் விளம்பர நிகழ்ச்சியில் தமன்னா கலந்து கொண்டு பணம் பெற்றுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டதாகவும் தமன்னாவுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

The post பண மோசடி வழக்கில் நடிகை தமன்னாவிடம் ஈடி திடீர் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: