இந்தத் தொடரில் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, ஹாங்காங், நேபாளம், நியூசிலாந்து, ஓமன், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகளும் இந்தத் தொடரில் விளையாடவுள்ளன. இந்தத் தொடர் 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பை வென்றிருந்தது.
போட்டி விதிமுறைகள்
* ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள்.
* ஒரு அணிக்கு அதிகபட்சமாக 5 ஓவர்கள் கொடுக்கப்படும்.
* இறுதிப்போட்டியிலும் 5 ஓவர்கள் கொடுக்கப்படும். ஆனால், ஒரு ஓவருக்கு 6 பந்துகளுக்கு பதிலாக 8 பந்துகள் வீச வேண்டும்.
* விக்கெட் கீப்பரைத் தவிர்த்து அணியில் உள்ள அனைவரும் பந்துவீசிக் கொள்ளலாம்.
* அதே போல வைட், நோபாலுக்கு 2 ரன்கள் வழங்கப்படும்.
* 5 ஓவருக்குள் 5 விக்கெட்டுகள் விழும் பட்சத்தில் அவுட்டாகாத பேட்டர் மட்டும் பேட்டிங் செய்வார்.
* அணியில் அவுட்டான ஒரு வீரர் ரன் உதவிக்கு மட்டும் களத்தில் நிற்பார்.
* ஒரு வீரர் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்ததும் ரிட்டயர்ஹர்ட் கொடுத்து வெளியேவரவேண்டும்.
* ஒருவேளை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அவுட் ஆகும் பட்சத்தில் ரிட்டயர்ஹர்ட் ஆன வீரருக்கும் மறுவாய்ப்பு அளிக்கப்படும்.
The post ஹாங்காங் சிக்ஸர் லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் விளையாடவுள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.