ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’

சென்னை: இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘அடியே’ இப்படத்தின் மோஷன் போஸ்டரை ஜெயம் ரவி வெளியிட்டார். ‘திட்டம் இரண்டு’ விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக கவுரி கிஷன் நடிக்க, முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் நடித்துள்ளனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.

மாலி அன்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம் குமார் தயாரித்துள்ளார். படம் குறித்து விக்னேஷ் கார்த்திக் கூறுகையில், ‘தமிழில் ஏராளமான அறிவியல் புனைவு கதைகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், அறிவியல் புனைவு சார்ந்த கதைக்களத்துடன், மல்ட்டிவெர்ஸ் தொழில்நுட்ப பின்னணியில் காதலைச் சொல்வதில், ‘அடியே’ படம்தான் முதல் படைப்பு’ என்றார்.

The post ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: