கமர்ஷியல் படத்துடன் கலைப்படமும் இயக்க வேண்டும்: மிஷ்கின் பேச்சு

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கையும், நடிகையுமான மகேஸ்வரியின் தம்பி உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், ஸ்ரீனி, சாய்பிரியா, யாமினி சந்தர் நடித்துள்ள படம், ‘டைனோசர்ஸ்’. கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் சீனிவாஸ் சம்பந்தம் தயாரிக்க, எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ளார். போபோ சசி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் பேசியதாவது: நான் அதிகமாக சிகரெட் பிடிப்பேன். ‘அஞ்சாதே’ படத்தை இயக்கியபோது, ஒரேநாளில் 130 சிகரெட்டுகள் வரை பிடித்திருக்கிறேன். அப்போதுதான் சிந்தனை மேம்படும், என்னால் படம் இயக்க முடியும் என்று நம்பியிருந்தேன். பிறகு என்னை மாற்றிக்கொண்டேன். ‘டைனோசர்ஸ்’ படத்தின் டைரக்டர் பெயர், மாதவன். இந்த பெயர் கொண்டவர்கள் எப்படியோ முன்னேறி விடுகிறார்கள்.

அவர் பேசும்போது, ‘கமர்ஷியல் படம்தான் இயக்குவேன். கலைப்படம் இயக்க மிஷ்கின் மாதிரி நிறையபேர் இருக்கிறார்கள்’ என்று சொன்னார். அப்படி அவர் பேசியது தவறு. கமர்ஷியல் படமும் இயக்க வேண்டும், கலைப்படமும் இயக்க வேண்டும். எனவே, உன்னை மாற்றிக்கொள் தம்பி. வெற்றிமாறன் கமர்ஷியல் படம் இயக்கினாலும், அதில் கலையைக் கொண்டு வந்துவிடுவார். இங்கு விஜயகுமார், அருண் விஜய் வந்துள்ளனர். பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் அருண் விஜய் நடிக்கிறார். அருண் விஜய்யிடம், ‘இப்போது பாலா தண்ணி அடிக்கிறாரா?’ என்று கேட்டேன். ‘இல்லை’ என்று பதில் வந்தது. அதைக் கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. இவ்வாறு மிஷ்கின் பேசினார். போனி கபூர், மகேஸ்வரி ஆகியோருடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

The post கமர்ஷியல் படத்துடன் கலைப்படமும் இயக்க வேண்டும்: மிஷ்கின் பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: