பெரம்பலூரில் மகளிர் குழுவினருக்கு சுயதொழில் பயிற்சி

 

பெரம்பலூர், செப்.10: பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பாக மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கோழி வளர்ப்பு பயிற்சி, கணினிப் பயிற்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும், மத்திய அரசின் திட்டமான பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் (BETI BACHAO BETI BATHAO) திட்டத்தின் மூலம் நேற்று (9ஆம்தேதி) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பி னர்களுக்கான Orientation and sensitization, பயிற்சி நடத்தப்பட்டது.

இந்தப் பயிற்சியின் மூலம் மகளிருக்கான கணினிப் பயிற்சி, சணல் பை தயாரிக்கும் பயிற்சி, கோழி வளர்ப்பு பயிற்சி போன்றவை நடத்தப் பட்டது. பயிற்சியினை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெய தொடங்கி வைத்தார். இந்த பயிற்சிகளில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இப்ப பயிற்சிக்கான ஏற்பாட்டை பெரம்பலூர்மாவட்ட மகளிர் அதிகார மைய பணியாளர் கள் ஒருங்கிணைத்து செய் திருந்தனர்.

The post பெரம்பலூரில் மகளிர் குழுவினருக்கு சுயதொழில் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: