அரியலூர், செப். 5: மாவட்ட திட்ட குழுவால் எந்த பலனும் கிடையாது என்று அரியலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அரியலூர் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் பல்துறை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். செயலர் தங்கம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், கவுன்சிலர் அன்பழகன் பேசுகையில். மாவட்ட திட்டக் குழு உருவாக்கப்பட்டு இதுவரை எந்த வித வளர்ச்சித் திட்டப் பணிகளும் நடைபெறவில்லை. தொடர்ந்து கூட்டத்தில், வலியுறுத்தி வந்தாலும், எந்த கோரிக்கையும் நிறைவேறவில்லை. எனவே இந்த திட்டக் குழுவால் எந்த பலனும் கிடையாது என்றார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக செலவினங்கள் உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
The post மாவட்ட திட்ட குழுவால் எந்த பலனும் கிடையாது அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.