கிருஷ்ணராயபுரம், செப்.5: கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதியில் கால் நடை துறையின் நடமாடும் மருந்தக ஊர்தியை எம்எல்ஏ மாணிக்கம் துவங்கி வைத்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் வீரியபாளையம் ஊராட்சியில் உள்ள கொமட்டேரியில், கால்நடைத்துறை சார்பில் நடமாடும் கால்நடை மருந்தக ஊர்தியை குளித்தலை எம்எல்ஏ.மாணிக்கம், தொடங்கி வைத்தார். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளின் அவசர சிகிச்சை தேவைப்பட்டால் 1962 எண்ணை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இவ்வாகனத்தில் சினை ஊசி, அனைத்து மருத்துவ சிகிச்சைகள், நுண்ணுயிர் சோதனை வசதி, பிரதியாக குளிர்சாதனப்பெட்டி போன்ற வசதிகள் உள்ளது.நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்.கதிரவன், கால்நடை உதவி டாக்டர்.கோகுல், நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி டாக்டர்.பாஸ்கர், திமுக கழக நிர்வாகிகள், கால்நடைத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post வீரப்பாளையத்தில் நடமாடும் கால்நடை மருந்தக ஊர்தி எம்எல்ஏ துவங்கி வைத்தார் appeared first on Dinakaran.