வங்கத்திடம் முதல் தோல்வி: பதிலடி தருமா பாகிஸ்தான்; இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்

ராவல்பிண்டி: பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச அணி அங்கு 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் நடைபெறும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. கூடவே முதல்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. இதுவரை பாக்-க்கு எதிராக 14 ஆட்டங்களில் விளையாடி உள்ள வங்கம் முதல் வெற்றியை, பாக் மண்ணிலேயே வசப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்ததும் இதுதான் முதல் முறை.

ஆக 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் வங்கம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 2வது டெஸ்ட் ராவல்பிண்டியில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்ட்டிலும் வெற்றியை தொடர்ந்தால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை கைப்பற்றியை புதிய சாதனையையும் வங்கம் படைக்கும். அதனால் நஜ்மன் ஹோசைன் தலைமையிலான வங்க அணியில் ஷதமன் இஸ்லாம், மொமினுல், முஷ்ஃபிகூர், லிட்டன் தாஸ, மெஹதி , ஷாகிப் ஆகியோர் மீண்டும் கலக்க காத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் ஷான் மசூத் தலைமையிலான பாக் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த டெஸ்ட்டில் வென்றால்தான் தொடரை சமன் செய்ய முடியும். ஏனென்றால் இதற்கு முன் வங்கத்துக்கு எதிராக நடந்த 7 டெஸ்ட் தொடர்களையும் பாக் தான் வென்றுள்ளது. அந்த பெருமையை மட்டுமல்ல கேப்டன் பதவியை தக்கவைக்க வெற்றி அவசியம்.

ஷான் தான் கேப்டனாக அறிமுகமான முதல் தொடரிலேயே ஆஸ்திரேலியாவிடம் 3-0 என்ற கணக்கில் பாக் ஒயிட்வாஷ் ஆனது. அவருக்கு இன்னும் முதல் வெற்றி வசப்படவில்லை. அவரசப்பட்டு டிக்ளேர் செய்யாமல், இந்த ஆட்டத்தில் அணியை கூடுதல் கவனத்துடன் ஷான் வழிநடத்தக்கூடும். வங்கத்திடம் டெஸ்ட் தொடரை இழக்காத பெருமையை தொடர பாபர், ரிஸ்வான், அயூப், சவுத் சக்கீல், முகமது, நஸீம் ஷா ஆகியோர் அதிரடி காட்டக்கூடும்.

The post வங்கத்திடம் முதல் தோல்வி: பதிலடி தருமா பாகிஸ்தான்; இன்று 2வது டெஸ்ட் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: