யுஎஸ் ஓபன் டென்னிஸ் நடப்பு சாம்பியன்கள் வெற்றி

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நேற்று 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் கோகோ காஃப்(20வயது, 3வது ரேங்க்), ஜெர்மனியின் தட்ஜனா மரியா(37வயது, 99வது ரேங்க்) ஆகியோர் மோதினர். ஒரு மணி 20நிமிடங்களில் 6-4, 6-0 என நேர் செட்களில் வென்ற காஃப் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர்களான நடப்பு சாம்பியன் நோவோக் ஜோகோவிச்(37வயது, 2வது ரேங்க்), லாஸ்லோ ஜெரே(29வயது, 109வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டன். அதிரடியாக விளையாடிய ஜோகோவிச் முதல் 2 செட்களை 6-4, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து 3வது செட்டில் 2-0 என்ற கணக்கில் ஜோகோவிச் முன்னிலையில் இருந்தபோது ஜெரே மட்டையை வீசிவிட்டு வெளியேறினார். அவரை ஜோகோவிச் ஆறுதல் படுத்தினார். அதனையடுத்து 2மணி 16நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை 3-0 என நேர் செட்களில் கைப்பற்றி ேஜாகோவிச் 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

* 2வது சுற்றில் இந்தியர்கள்
யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள், பல்வேறு நாடுகளின் வீரர்களுடன் இணை சேர்ந்து களம் கண்டனர். அவற்றின் நேற்று நடந்த முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீராம் பாலாஜி(தமிழ் நாடு)/ அர்ஜென்டீனா வீரர் குய்டோ ஆண்ட்ரெஸ்சி இணை 5-7, 6-1, 7-6(12-10) என்ற செட்களில் மார்கஸ் டேனியல்(நியூசிலாந்து)/மிகேல் வரேலா(மெக்சிகோ) இணையை வீழ்த்தியது. யூகி போம்ரி(இந்தியா)/அல்பனோ ஒளிவெட்டி(பிரான்ஸ்) இணை 6-3, 6-4 எ ன நேர் செட்களில் அமெரிக்காவின் ரியான் செக்கர்மன்/பேட்ரிக் ட்ராக் இணையை வீழ்த்தியது. இந்திய இணைகள் நாளை 2வது சுற்றில் களம் காண இருக்கின்றனர்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் நடப்பு சாம்பியன்கள் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: