2வது நாளான நேற்று பென் டக்கெட் 18, டான் லாரன்ஸ் 30, ஒல்லி போப் 6 ரன்னில் அவுட் ஆக ஜோ ரூட் 42, ஹாரி புரூக் 56 ரன் எடுத்தனர். கிறிஸ் வோக்ஸ் தனது பங்கிற்கு 25 ரன் எடுத்து போல்டானார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன் எடுத்திருந்தது. ஜேமி ஸ்மித் 72, கஸ் அட்கின்சன் 4 ரன்னில் களத்தில் இருந்தனர். கைவசம் 4 விக்கெட் இருக்க இலங்கையை விட 23 ரன் அதிகம் பெற்றுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.
The post இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி முன்னிலை appeared first on Dinakaran.