கல்லூரி மாணவரை தாக்கியவர் கைது

 

கோவை, ஆக. 19: கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் மோகுல் (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ 3ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில், அவரது சகோதரர் ஆகாஷ் (20) 4ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோகுல் காரில் சென்றபோது, சக கல்லூரி மாணவர் ஹரீஸ் என்பவரின் காரில் மோதியதாக தெரிகிறது. இதனையடுத்து மோகுலிடம் ஹரீஸ் காரை பழுது பார்க்க பணம் கேட்டுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மற்றொரு மாணவர் உதயசங்கர் (22) என்பவர், மோகுலிடம் நான் பேசி பணம் வாங்கி தருவதாக ஹரீசிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர்களுக்கிடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், சின்னவேடம்பட்டி துடியலூர் ரோட்டில் ஆகாஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உதயசங்கர், காரை பழுது பார்க்க உனது சகோதரர் இன்னும் பணம் தரவில்லை, அவர் எங்கே? என கேட்டார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உதயசங்கர் தகாத வார்த்தைகளால் பேசி ஆகாசை ஹெல்மெட்டால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆகாஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் உதயசங்கரை கைது செய்தனர்.

 

The post கல்லூரி மாணவரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: