கொடைக்கானலில் சூர்யாவின் ‘கங்குவா’ படப்பிடிப்பு தொடங்கியது

கொடைக்கானல் சூர்யா இயக்குனர் சிவா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு கங்குவா என தலைப்பு வைத்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஹிந்தி நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவா மற்றும் பிஜூ தீவுகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கங்குவா’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கொடைக்கானலில் சூர்யாவின் ‘கங்குவா’ படப்பிடிப்பு தொடங்கியது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: